தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை - காப்பீடு அட்டை திட்டம் துவக்கம்

தனியார் மருத்துவ மனைகளில் இலவசமாக சிகிச்சை மேற்கொள்வதற்காக தமிழக அரசு மருத்துவ காப்பீடு அட்டை திட்டம் தொடங்கப்பட்டது.

Update: 2023-12-03 11:13 GMT

காப்பீடு திட்ட பதிவு முகாம்  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் இலவசமாக சிகிச்சை மேற்கொள்வதற்காக தமிழக அரசு மருத்துவ காப்பீடு அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அட்டை பெறும் பயனாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் அனைத்து பொது மக்களும் பயன்பெறும் விதமாக  விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் உள்பட மூன்று இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு சுகாதார துறையினர் ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த நிலையில் சாத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்ட பதிவு செய்யும் சிறப்பு முகாமை மதிமுகவின் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.ரகுராமன் தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு முகாமில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்ட முகாமில் பதிவு செய்து கொண்டனர். மேலும் இந்த சிறப்பு முகாமில் பதிவு செய்த மூன்று பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகளை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமன் வழங்கினார். மேலும் இந்த சிறப்பு முகாமில் விருதுநகர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் டாக்டர் கண்ணகி மற்றும் திட்ட அலுவலர் சுந்தர மூர்த்தி உள்படபலர் கலந்து கொண்டனர். மேலும் இத்திட்டத்தில் இதுவரை 1,77,363 பயனாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு 283,521,8,292 தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் 1513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளும், 52 நோய் கண்டறிதல் பரிசோதனை களும் 8 உயர் அறுவை சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டு உள்ளன. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை தமிழக அரசின் காப்பீடு திட்ட அட்டைக்கு பதிவு செய்த பயனாளிகளின் எண்ணிக்கை: 4,21,799 என சுகாதார துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Tags:    

Similar News