சேலம் அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கு சிகிச்சை

சேலம் அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2023-12-25 13:09 GMT

அரசு மருத்துவமனை

சேலம் மூலபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது48). இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக தண்டனை பெற்று சேலம் மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில் பழனிசாமிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஜெயில் ஆஸ்பத்திரியில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் காய்ச்சல் குணமாகவில்லை. டாக்டர்கள் பரிேசாதனை செய்ததில் காய்ச்சல் தீவிரம் அடைந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜெயில் வார்டன்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பழனிசாமிக்கு பரிசோதனை செய்ததில் மஞ்சள்காமாலை இருப்பது உறுதிபடுத்தப்பட்டது . இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News