இலவச வீட்டுமனை கேட்டு பழங்குடியின மக்கள் மனு
கோணை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள், இலவச வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கோணை கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக் கள், மாவட்ட கலெக்டர் பழனியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- செங்கல் சூளையில் வேலை செய்து வந்த நாங்கள் தற்போது கோணை அரசு புறம்போக்கு இடத்தில் குடிசை வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தர வீடு இல்லாததால் முகவரி ஆவ ணம் பெற முடியாமல் இருக்கிறோம். எங்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஏதும் இல்லை. மிகவும் ஏழ்மையான சூழலில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
மேலும் சாதிச்சான்று உள் பட அனைத்து அடையாள அட்டைகளும் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனு வைப்பெற்ற கலெக்டர் பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்து நட வடிக்கை எடுப்பதாக கூறினார்.