தேர்தலை புறக்கணிப்போம் - பழங்குடியின மக்கள் கோபம் !

தேர்தலை புறக்கணிப்பது மட்டுமின்றி அரசு அடையாள அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க இருளர் பழங்குடியின மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Update: 2024-03-06 09:57 GMT
பழங்குடியினர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் பஞ்சாயத்திற்குட்பட்ட பில்லூர் மட்டம் வனப்பகுதியில் சின்னாலகோம்பை இருளர் பழங்குடியினர் கிராமம் அமைந்துள்ளது. யானை, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழும் இந்த வனப்பகுதியில் சுமார் 60 இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கூலித் தொழில் இவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. சின்னாலகோம்பை கிராம மக்கள் ரேஷன் பொருட்கள், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட 4கி.மீ., அடர்ந்த வனப்பகுதி வழியே நடந்து பயணிக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. கர்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்கின்றனர். அவ்வபோது வனவிலங்குகள் எதிர்கொளள்களும் நடக்கின்றன. இந்நிலையில் சின்னாலகோம்பை மக்கள் கூறுகையில், "பல ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தி தர கோரி மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது நாள் வரை எந்த ஒரு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களை சந்தித்தது இல்லை. எனவே,எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புரக்கணித்து, அரசு அடையாள அட்டைகளான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க போகிறோம்,"என்றனர்.
Tags:    

Similar News