தேமுதிக தலைவர் விஜயகாந்திற்க்கு அஞ்சலி
சங்ககிரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்க்கு தேமுதிகவினர் அஞ்சலி;
By : King 24x7 Website
Update: 2024-01-02 17:33 GMT
சங்ககிரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்க்கு தேமுதிகவினர் அஞ்சலி
சேலம் மாவட்டம் சங்ககிரியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உருவப்படத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி பெண்கள் தேமுதிக நிர்வாகிகள் கதறி அழுதபடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தேமுதிக நிறுவன தலைவரும் தமிழக முன்னாள் சட்டமன்ற தலைவருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் 28 வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் காலமானார் அதனைத் தொடர்ந்து அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கேப்டன் அவர்களுக்கு தேமுதிகவினர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்திற்குட்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி கிடையூர் மேட்டூர் பகுதியில் சேலம் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், தலைமையில் பொருளாளர் தங்கமணி உள்ளிட்ட தேமுதிகவினர் விஜயகாந்த் அவர்களின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது சங்ககிரி ஒன்றிய அவை தலைவர் செந்தில்குமார், ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் மனோகர், கிடையூர் மேட்டூர் கிழக்கு வளவு காலனி கிளைச் செயலாளர் தங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் மூர்த்தி, முத்துக்குமார்,குமரேசன், முருகன் மகளிர் அணி நிர்வாகிகள் உமாபதி, செல்வி, உஷா, விஜயா உட்பட ஒன்றிய,நகர, மகளிர் அணி நிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியதோடு கதறி அழுதபடி கண்ணீர் மல்க விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.