திருச்சி மத்திய சிறை அலுவலக மேலாளர் திடீர் மரணம்
திருச்சி மத்திய சிறை அலுவலக மேலாளர் திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-07-01 09:00 GMT
திருச்சி மத்திய சிறையில் அலுவலக மேலாளராக பணிபுரிந்து வந்தவர் திருமுருகன் (49). இவர், நேற்று (30-06-2024) மதியம் மத்திய சிறை வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே, அவரை உறவினர்கள் மற்றும் சிறை காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே திருமுருகன் மரணம் அடைந்தார் . அவரது உடல், மத்திய சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது.