வித்யாநிகேதன் இண்டெல் பப்ளிக் பள்ளியில் முப்பெரும் விழா

நாமக்கல் மாவட்டம் வித்யாநிகேதன் இண்டெல் பப்ளிக் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2024-03-25 16:19 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தேங்கல்பாளையம் வித்யா நிகேதன் இண்டல் பப்ளிக் பள்ளியில் முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இப்பள்ளியின் மழலையர்கள் பட்டமளிப்பு விழா, விருதுகள் வழங்கும் விழா, ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழாவில் பள்ளியின் தலைவர் பி.நடராஜன் தலைமை வகித்தார். ஆசிரியை பு.பவித்ரா வரவேற்றுப் பேசினார். பள்ளியின் முதல்வர் எம்.உமா ஆண்டறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஆத்தூர் அருண் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளியின் தலைவர் டி.நாராயணி நாசர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மழலையர்களுக்கு பட்டங்கள், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார். முன்னதாக சிறப்பு விருந்தினரை பள்ளித் தாளாளர் எஸ்.பிரகாஷ் அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

நிர்வாகக்குழு உறுப்பினர் ஆர்.கணேசன், ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கெளரவித்து நினைவு பரிசளித்தனர். மழலையர் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர் டி.நாராயணி நாசர், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வராஜூ, எஸ்.அப்துல்கரீம், சி.ஈஸ்வரமூர்த்தி, சு.இளையப்பன், என்.ஹேமலதா, பள்ளி முதல்வர் எம்.உமா ஆகியோர் பட்டங்கள் வழங்கினர். சிறு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தொலைநோக்கு பார்வையோடு கல்வியில் உயர வழிகாட்டும் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. “பட்டம் விடும் கைகளில் பட்டம் பெற்ற குழந்தைகள்” குழந்தைகள் மஞ்சள் கோட் மற்றும் தலைபட்டை அணிந்து பட்டங்களைப் பெற்றனர். தனது குழந்தைகள் சிறுவயதிலேயே பட்டம் பெறுவதைப் பார்த்த பெற்றோர்களுக்கு இந்நிகழ்வு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. பள்ளியில் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பாட்டுப் போட்டி, கையெழுத்து போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, வெளிப்புற போட்டிகள், ஆகியவற்றில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. கல்வியில் சிறந்த மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டது. சிறப்பாக பணி ஆற்றிய ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் வண்ண உடைகள் அணிந்து நடனமாடியும், நாடகம் மற்றும் நாட்டியம் வாயிலாக அனைவரையும் மகிழ்வித்தனர். இறுதியாக பள்ளியின் ஆங்கில ஆசிரியர் திருமதி. ஆ. சந்திரவதனி அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. இவ்விழாவில் பள்ளியின் இயக்குநர்கள், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News