சுற்றுலா வேன் மீது லாரி மோதி விபத்து - 21 பக்தர்கள் படுகாயம்

Update: 2024-03-04 06:57 GMT

தியாகதுருகம் காவல் நிலையம்  

சேலம் மாவட்டம், நாயக்கன்பட்டியைச் சேர்ந்த 20 பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு வேனில் புறப்பட்டனர். அக்கரைப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் சிவா, 28; வேனை ஓட்டினார். தியாகதுருகம் புறவழிச் சாலையில் நள்ளிரவு 1:30 மணிக்கு வந்தபோது, புக்குளம் மேம்பாலம் அருகே எதிரே வந்த ஈச்சர் லாரி வேன் மீது மோதியது.

இந்த விபத்தில், டிரைவர் சிவா, மாரியம்மாள், 60; ராசாத்தி, 33; ராஜம்மாள், 65; அலமேலு, 42; தங்கமணி, 44; சாந்தி, 40; ரவிச்சந்திரன், 30; முருகன், 50; உட்பட 21 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற தியாகதுருகம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News