கெங்கவல்லியில் காசநோய் கண்டறியும் முகாம்
சேலம் மாவட்டம், தெடாவூர் பகுதியில் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், தெடாவூர் அரசுஆரம்ப சுகாதார நிலையத்திற்குஉட்பட்ட, நடுவலூர் சமத்துவபுரம்,கிராமத்தில் காச நோயாளிகளைகண்டறிதல் சிறப்புமுகாம் பரிசோதனை நடைபெற்றது. தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை வாகனத்துடன் நடபெற்ற இம்முகாமிற்கு காசநோய் பிரிவு மாவட்ட துணை இயக்குனர் கணபதி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம்,தடுப்பு முறைகள்,சிகிச்சை முறைகள், காசநோயாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்துவிளக்கமளித்துவிழிப்பணர்வு ஏற்படுக்கினர். இம்முகாமில் வட்டார மருத்துவர் வேலுமணி, காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் சின்னதுரை, சுகாதார செவிலியர்கள் சுந்தராம்பாள், மனோன்மணி, புஷ்பலதா, ஆனந்தி, ஜீட்பணியாளர்கள் மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர், நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை எந்திரத்தில் 56 நபர்களுக்கு எக்ஸ்ரே படம் எடுக்கப்பட்டது,
இதில் 14 நபர்களுக்கு சளி, மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே எக்ஸ்ரே எந்திரத்தை கொண்டு வந்து பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தது மிகவும் உபயோகமாக அமைந்ததாக பயனாளிகள் தெரிவித்தனர்.