லெமூர் கடலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள் - கலெக்டர் ஆய்வு
லெமூர் கடற்கரை ஆமை குஞ்சு பொரிப்பகத்தில் பிறந்த 39 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் குடும்பத்தோடு வந்து பார்வையிட்டார்.
Update: 2024-04-29 05:00 GMT
கன்னியாகுமரி மாவட்டம் கடலோரப் பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆமைகள் பொரிப்பகம் அமைக்கப்பட்டு, ஆமைகள் பொரித்த பின்னர் அதனை கடலில் விடும் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கூடுதலாக குமரி லெமூர் கடற்கரையில் ஆமை குஞ்சு பொரிப்பகம் உருவாக்கப்பட்டு ஆமை குஞ்சுகள் கடலில் விடப்படுகிறது. கடந்த வாரம் 75 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று காலை வேளிமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட லெமூர் பீச்சில் ஐடி நம்பர் 20 முதல் 39 ஆமை பிஞ்சுகள் பொறித்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் உத்தரவுபடி அதை கடலில் விடப்பட்டன. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் குடும்பத்துடன் வந்து ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வை பார்வையிட்டார். அப்போது வனத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.