சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

மாயனூர் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-12-24 03:43 GMT

பைல் படம் 

கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், டிசம்பர் 22ஆம் தேதி மதியம் 2 மணியிலிருந்து 4-மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, மஞ்சமேடு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்த கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, சித்தலவாய், பிச்சம்பட்டி அரிஜன தெருவை சேர்ந்த சின்னு என்கிற சின்னயன் 67., என்பவரையும், இதே போல வீட்டில் வைத்து மது விற்பனை செய்த, மேட்டு திருக்காம்புலியூர் அரிஜன தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணன்  56., ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த தலா 6- பாட்டில் வீதம் 12 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த மாயனூர் காவல்துறையினர் இருவரையும் காவல் நிலைய பிணையில்  விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News