மது பாட்டில்கள் விற்ற இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கோமங்கல் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்தனர்.

Update: 2024-01-22 01:50 GMT

மது விற்பனை

விராலிமலை அருகே போலீசார் கோமங்கலம் மற்றும் ராஜாளிபட்டி அருகே அரசு அனுமதி இன்றி மது விற்ற இருவரை கைது செய்து 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விராலிமலை பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விராலிமலை போலீசார் கோமங்கலம் மற்றும் ராஜாளிப்பட்டி பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணிக்கம், மணி ஆகிய இருவரும் அரசு அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த விராலிமலை போலீசார் அவர்கள் வைத்திருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News