கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
தேனி அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-01-04 01:18 GMT
மாவட்ட காவல் அலுவலகம்
தேனி போதைப்பொருள் தடுப்பு நுண்ணுறிவு பிரிவு காவல் துறையினர் நேற்று கோட்டூர் சாலையில் நடத்திய சோதனையில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற சத்ரியன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு கிலோ கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் மேலும் அவர் அளித்த தகவலின் படி கோகிலாபுரம் குளக்கரையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த அபிமன்யுவை காவல்துறையினர் 2 கிலோ கஞ்சாவுடன் கைது செய்தனர்.