தமிழ்நாட்டிற்கு கேரளாவிலிருந்து கஞ்சா கடத்திய இருவர் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையின் போது கேரளாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்தனர்.;
Update: 2024-04-01 11:38 GMT
கஞ்சா கடத்தியவர் கைது
தேனி மாவட்டம், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பு ஆய்வாளர் தலைமையில் காவல்துறையினர் வந்து சென்ற போது புறவழிச் சாலையில் ஊத்துக்காடு பிரிவு அருகே வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி வரப்பட்ட 1.200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது கஞ்சாவை கைப்பற்றிய காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்த பிரவீன் குமார் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்