ஆடு திருடிய இருவர் கைது

விராலிமலை அருகே மேய்சலுக்கு விட்டபப்ட்ட ஆட்டை திருடி தப்ப முயன்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-10 10:06 GMT

காவல் நிலையம் 

விராலிமலை ஒன்றியம் மண்டையூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் 31. வெள்ளாடு வளர்த்து வருகிறார். இவருக்கு  சொந்தமான ஆடுகள் காட்டு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன அப்போது ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு மணிவண்ணன் அங்கு சென்று பார்த்த போது ஒரு ஆட்டை இரண்டு வாலிபர்கள் பிடித்து பைக்கில் ஏற்றி தப்பி சென்றனர். இது பற்றி மண்டையூர் போலீசில் மணிவண்ணன் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் ஆட்டை திருடி சென்றவர்கள் மண்டையூர் சோதிரியான் காடு பகுதியை சேர்ந்த கார்த்திக்  25 அவரது மைத்துனர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த அரவிந்த்  25 என்பது தெரிய வந்தது. மண்டையூர் முருகன் கோவில் அருகே பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர் .கீரனூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திக் மீது ஏற்கனவே ஆடு திருடியது, ராசிபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடியது உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News