இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

திருமுருகன்பூண்டி பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-01 10:42 GMT

திருட்டு வழக்கில் கைது

திருப்பூர் ரங்கேகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (65).இவர் கடந்த 18ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் வெளியூர் சென்றுள்ளார். 19ஆம் தேதி சந்திரசேகர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த யமஹா ஜெட் ஆர் வகை இருசக்கர வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் சந்திரசேகர் சம்பவம் குறித்து திருப்பூர் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். நேற்று அவிநாசி சாலையில் போலிசார் வாகண சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்ததால் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரனையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா (37) மற்றும் சோனி ராஜா (28) என்பதும் கடந்த 18ஆம் தேதி இரவு சந்திரசேகர் வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்ததாகவும் , வீட்டில் பொருட்கள் இல்லாததால் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News