கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் பலி: சோகத்தில் மீனவ கிராமம்
ராமநாதபுரத்தில் கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் பலியான சோகத்தில் மீனவ கிராமம் உள்ளது.
By : King 24X7 News (B)
Update: 2024-06-16 16:05 GMT
ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மேற்கு வாடி மீன் பிடி துறைமுகத்திலிருந்து நேற்று மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஒரு விசைப்படகில் ஐந்து மீனவர்கள் சென்ற நிலையில் படகு சேதம் அடைந்ததை அடுத்து அதில் இருந்த இரண்டு நபர்கள் அருகில் இருந்த படகுமூலம் மீட்கப்பட்டு,கரை சேர்ந்தனர்.
இந்த நிலையில் ஆரோக்கியம், பரகத்துல்லா என்ற இரண்டு மீனவர்கள் மட்டும் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து அவருடைய உறவினர்கள் சோகத்தில் உறைந்துள்ளனர்.