ஊரணியில் குளிக்கச் சென்ற இரு சிறுமிகள் பலி - ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
காவல்துறையினர் விசாரணிய மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-04 07:44 GMT
குளிக்கச் சென்ற இரு சிறுமிகள் பலி
சிவகங்கை மாவட்டம், கீழாயூர் பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது மகள் சலிமத் ஆசிபா(14), ஜாகிர் உசேன் மகள் நூருல் மஜித்தா (15), ரியாஸ் அகமது மகள் அமீனா நஸ்ரின் (21) ஆகிய மூவரும் அதே பகுதியில் உள்ள ஊரணியில் குளித்து கொண்டிருந்தபோது நீச்சல் தெரியாமல் ஆழத்தில் சென்று முழ்கியுள்ளனர். அருகில் இருந்த கிராமத்தினர் மூன்று பேரையும் மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி சலிமத் ஆசிபா, நூருல் மசித்தா ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அமீனா நஸ்ரின் என்பவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இளையான்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.