ராமநாதபுரத்தில் கிரேன் விழுந்து இருவர் காயம்

ராமநாதபுரம் பாம்பன் புதிய ரயில் பால கட்டுமான பணியின் போது ராட்சத இரும்பு கிரேன் முறிந்து விழுந்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-02 08:45 GMT


ராமநாதபுரம் பாம்பன் புதிய ரயில் பால கட்டுமான பணியின் போது ராட்சத இரும்பு கிரேன் முறிந்து விழுந்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


ராமநாதபுரம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புதிய ரயில் பால கட்டுமான பணியினை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள், கடந்த சில மாதங்களாக விரைவுபடுத்தப்பட்ட நிலையில் கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுவே தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.

இந்த தூக்குப் பாலத்தினை தாங்கி நிற்ககூடிய தூண்கள் அமைக்கும் பணி ஒரு புறம் முடிந்த நிலையில், தற்போது மறுபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென ராட்சத இரும்பு கிரேன்கள் கடலின் நடுவே நிறுத்தி வைக்கப்பட்டு, அதன் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கட்டுமான பணியில் இருந்த கிரேன்களில் ஒன்று திடீரென முறிந்து விழுந்ததில் நாட்டுப்படகில் பணியாற்றிய உள்ளூர் தொழிலாளர்களான மாரியப்பன், கிறிஸ்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்ற பணியாளர்கள் மீட்டு, சிகிச்சைக்காக ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News