காங்கேயத்தில் ஆட்கள் கடத்தல் வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது
காங்கேயம் அருகே 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கடத்தல் சம்பவத்தில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களை கைது செய்த நிலையில் நேற்று மேலும் இதுவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்த காங்கேயம் காவல்துறையினர்.
Update: 2024-03-30 01:50 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்காவை அடுத்த மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கலா மற்றும் அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிரைவர் கார்த்திக் ஆகியோரை கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கடத்தி அவர்களிடமிருந்து ரூ. 5 லட்சம் பணம் மற்றும் 8 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை வழிப்பறி செய்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை காங்கேயம் தனிப்படை போலிசார் தேடி வந்த நிலையில் கடந்த மாதம் நாமக்கல் மாவட்டம் வேலூரை சேர்ந்த சுதா, காங்கேயம் பகுதி படியூரை சேர்ந்த இந்திராணி, திருப்பூரை சேர்ந்த கார்த்திகேயன், சந்தோஷ், பாண்டித்துரை, செந்தில்குமார் மற்றும் முத்தூரை சேர்ந்த செந்தில் குமார் ஆகியோரை போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த நிலையில் மேலும் பலர் தலைமறைவாக உள்ளதாகவும், தலைமறைவாக உள்ளவர்களில் முக்கிய நபர்கள் இருக்கலாம் எனவும் சந்தேகித்து நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் கடந்த மார்ச் 9ஆம் தேதி தாராபுரம் ரைஸ் மில் தோட்டத்தை சேர்ந்த கடத்தலின் முக்கிய புள்ளியான ஜெகதீஷ் வயது 39 என்பவரை போலிசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மேலும் முக்கிய தாதாக்களின் பெயர்கள் அடங்கிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்மேலும் தேடுதல் வேட்டை தொடரப்பட்டது. இதில் நேற்று தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்குடி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்கின்றமாரியப்பன் வயது 34 மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தெரியிலாந்தூர் அருண்மொழி தேவன் வயது 33 ஆகிய இருவரை போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.