போலீசாருக்கு மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது
திருவேங்கடம் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
Update: 2023-12-13 12:01 GMT
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள மேலமரத் தோணி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் தண்டபாணி மற்றும் விருதுநகர் மாவட்டம் செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய கோட்டியப்பன் மகன் ராஜபாண்டி என்பவரும் ராஜபாளையம் சாலையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி தகவல் அறிந்த திருவேங்கடம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சூசை பாண்டி போலீசார் இருவரையும் கைது செய்ய முயன்றனர்.
அப்போது இருவரும் போலீசாருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்த புகாரின் பேரில் திருவேங்கடம் போலீசார் தண்டபாணி மற்றும் ராஜபாண்டி இருவரையும் கைது செய்து அவரிடமிருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.