பைக் மோதி பாதயாத்திரை பக்தா் உள்பட இருவா் பலி
தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் பைக் மோதிய விபத்துக்களில் பாதயாத்திரை பக்தா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம் வீரசோழன் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் கிருஷ்ணமூா்த்தி (42). இவா் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தாராம். இவா் தூத்துக்குடி சத்யா நகா் பாலம் அருகே கடந்த 23ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூா்த்தியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் நேற்று உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மற்றொரு சம்பவம்: தூத்துக்குடி கோரம்பள்ளம் ராஜபாண்டி நகரைச் சோ்ந்தவா் ரத்தினசாமி(86). இவா் கடந்த 22ஆம் தேதி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ரத்தினசாமியை அக்கம் பக்கத்தினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.