பட்டாசு மூலப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
விருதுநகரில் பட்டாசு மூலப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவரை கைது செய்தனர்.;
Update: 2024-05-18 04:55 GMT
பட்டாசு மூலப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது
விருதுநகர் அம்மன் கோவில் பட்டி புதுரைச் சார்ந்த சுந்தரம் என்பவரின் விவசாய நிலத்தில் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை பதிக்கு வைத்திருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் லதா மற்றும் கிராம உதவியாளர் சுப்புலட்சுமி என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சோதனை செய்ததில் டாட்டா ஏசி வாகனத்தில் கண்ணன் மற்றும் மாரி செல்வமாகிய இருவரும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை பதிக்க வைத்திருந்தது தெரியவந்தது அவற்றை பறிமுதல் செய்த ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்