கொலை சம்பவத்தை சமூக மோதல் உருவாக்க தூண்டியதாக இருவர் கைது
மயிலாடுதுறையில் இரு வேறு சமூகத்திற்கு இடையே நடந்த கொலை வழக்கில் மேலும் சமூக மோதலை ஏற்படுத்தும் விதமாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட இருவர் கைது
Update: 2024-03-31 18:31 GMT
மயிலாடுதுறை கலைஞர் காலனியை சேர்ந்த ரவுடி அஜித்குமார் என்ற வாலிபரை கடந்த 20ம் தேதி இரவு திருஇந்தளூர் பகுதியில் மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இச்செயலை பழிக்குப் பழியாக கொத்த தெருவை சேர்ந்தவரும் 2022ல் படுகொலை செய்யப்பட்டவருமான ரவுடி கண்ணன் என்பவரின் சகோதரர் மற்றும் நண்பர்கள் ஏழு பேர் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அஜித்குமார் கொலைக்கு பழிவாங்குதலே காரணம் என்று கலைஞர் காலனி பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் அவரது கொலைக்கு பழிவாங்குவோம் என்று கலைஞர் காலனி சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரும் அஜய் என்பவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இச்செயல் சமூக மோதலை ஏற்படுத்தும் என்பதால் மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.