இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து !
இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-14 05:29 GMT
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் இருந்து அரிசி ஆலையிலிருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திருவாரூர் குடோனுக்கு சென்ற லாரியும் ,கொல்லுமாங்குடியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதிக்கு கிராவல் மண் ஏற்ற சென்ற லாரியும் முகுந்தனூர் பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் மோதின. லாரி ஓட்டுநர் என் கண் கீழ காலனி தெருவை சேர்ந்த சிங்கு என்பவரின் மகன் சிவக்குமார் என்பவருக்கும் மற்றொரு லாரி ஓட்டுனர் தரங்கம்பாடி காரப்பள்ளம் காட்டுச்சேரி பிச்சைமுத்து என்பவரின் மகன் பாக்கியராஜ் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.