அரவக்குறிச்சி அருகே மதுபோதையில் வாலிபரை தாக்கிய இருவர் கைது

அரவக்குறிச்சி அருகே மதுபோதையில் வாலிபரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்;

Update: 2024-03-21 14:00 GMT

காவல் நிலையம் 

 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வேலம்பாடி மேற்கு பொன்னகர் அருகே உள்ள ரங்கராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்.

இவரது நண்பர்கள் அரவக்குறிச்சி தாலுகா வேலம்பாடி கேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மத் வயது 26 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சபி வயது 24. இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்த போதும் நண்பர்களாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில் மார்ச் 19ஆம் தேதி மதியம் 3 மணி அளவில், மேற்கு ரெங்கராஜ் நகர் அருகே உள்ள பெந்தகொஸ்தே சர்ச் அருகே, சமீர் முகமது மற்றும் சபி ஆகிய இருவரும் மது போதையில் ஜெகநாதனிடம் தகராறு செய்து உள்ளனர்.

Advertisement

அப்போது இருவரும் சேர்ந்து ஜெகநாதனை தகாத வார்த்தை பேசி, கைகளாலும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஜெகநாதன் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

இது தொடர்பாக சமீர் முகமது மற்றும் சபிக் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Tags:    

Similar News