தொழிலாளியை தாக்கிய இருவர் கைது
சேலத்தில் தொழிலாளியை தாக்கிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-01-11 11:20 GMT
சேலம் , தாதகாப்பட்டி மூணாங்கரடு , காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் புவன சந்திரன் (வயது 25). கூலித்தொழிலாளி. இவரது தம்பி விஜய் (23). சம்பவத்தன்று இவர்கள் இருவரும் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஹாரன் அடித்தது தொடர்பாக அவர்களுக்கும், அங்கிருந்த 4 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அந்த நபர்கள் புவன சந்திரனை பீர் பாட்டில் மற்றும் கம்பிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மூணாங்கரடு கொத்தடிமை காலனி பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள் வினோத் (25), விக்னேஷ் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அவர்களது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.