வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது 

மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியில் வயலுக்குச் சென்று திரும்பிய நபரை  வழிமறித்து அவரிடமிருந்து பணத்தைப் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-14 06:02 GMT

பைல் படம் 

மயிலாடுதுறை அருகே குத்தாலம் சேத்திரபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணிய மகன் இளங்கோவன். இவர் சம்பவ தினத்தன்று காலை தன் வயலுக்கு சென்று விட்டு கடவங்குடி  வழியாக வரும்போது அகர சின்னியநல்லூரைசேர்ந்த ராமச்சந்திரன் மகன் காளியப்பன்(34) மற்றும் குத்தாலத்தைச் சேர்ந்த ராஜாராமன் மகன் மணிபாரதி(30) ஆகிய இருவரும் இளங்கோவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 500 ரூபாயை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News