திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய இரண்டு பேர் கைது
எறையூர் பகுதியில் நடந்த ATM கொள்ளை முயற்சி மற்றும் 5 இருசக்கர வாகன திருட்டு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தனசேகரன் வழிகாட்டுதலின் படியும் மங்களமேடு காவல் ஆய்வாளர் பாலாஜி . தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமைக் காவலர்கள் அலெக்சாண்டர், முனீஸ்ராஜா மற்றும் முதல்நிலைக் காவலர் கார்த்திக்* ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை செய்தும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும் மேற்படி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் வளையமாதேவி மெயின் ரோடு பகுதி சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஆகாஷ் வயது -19, மற்றும் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அத்தியூர் வடக்கு தெரு, வீரதுறை மகன் மணிகண்டன் வயது -21, என்பது தெரியவந்தது. மேலும் குற்றவாளிகள் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தியதில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவலாக மங்களமேடு எறையூர் பகுதியில் ATM-இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் இவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.
இதனடிப்படையில் குற்றவாளிகள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து *கீழப்புலியூர், 36 எறையூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் திருடிய 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் ATM கொள்ளை முயற்சிக்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் என மொத்தம் 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து குற்றவாளிகள் இருவரையும் மங்களமேடு காவல் ஆய்வாளர் பாலாஜி மே 27ஆம் தேதி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.