விசிக சார்பில் இருசக்கர வாகன பிரச்சார பேரணி

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய விசிக கட்சி சார்பில், வெல்லும் ஜனநாயக மாநாடு குறித்த இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது.

Update: 2024-01-22 08:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றிய விசிக கட்சி சார்பில், ஒன்றிய செயலாளர் ஏ.க.தயாநிதி தலைமையில் வெல்லும் ஜனநாயக மாநாடு குறித்த இருசக்கர வாகன பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை விசிக கட்சியில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் செய்யூர் தா பொன்னிவளவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த இருசக்கர வாகன பேரணியானது வெல்லும் சனநாயகம் மாநாடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

லா.எண்டத்தூரிலிருந்து மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அய்யணார் கோயில் வரை சுமார் 15 கிலோமீட்டர் வரை மாநாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் தொகுதி செயலாளர் பேரறிவாளன், ஒன்றிய துணை செயலாளர் மதன் என்கின்ற செந்தமிழன், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் முகாம் நிர்வாகிகள் தம்பிவல்லவன், முருகவேல்சிறுத்தை, தாமரை, ஆதித்தமிழன், அருள், பங்கு மோகன், கேது, மோகன், ஜெகன், முருகன், ராஜேஷ், தேசிங், வெங்கடேசன், மாசிமணிகண்டன், ருத்ரமூர்த்தி, சுதாகர், ஆறுமுகம், பிரகாஷ், சுமன், சின்னா, கோசல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News