டூவீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து- இருவர் படுகாயம்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி, கோனூர், வரவிதோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் (21). இதே போல, கரூர் அடுத்த ராயனூர், நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (21).இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் நவம்பர் 16ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில் கோவை -கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களுக்கு வாகனம் முத்துச்சோளிப்பாளையம் அருகே வந்தபோது, எதிர் திசையில் வேகமாக வந்த, திருச்சி மாவட்டம், துறையூர், பெருமாள் மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (37) என்பவர் ஓட்டி வந்த கார், பாலாஜி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த பாலாஜி மற்றும் கோகுல் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோகுல் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், ஆஜாக்கிரதையாகவும் ஒட்டியதாக ஜெயப்பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.