நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதல் - முதியவர் உயிரிழப்பு.
அரவக்குறிச்சி அருகே நடந்து சென்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வெரிச்சம் பட்டி அருகே உள்ள ரெங்கராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் 60. இவர் ஜனவரி 20ஆம் தேதி அதிகாலை 5:30- மணி அளவில் அரவக்குச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது, மோளயாண்டிபட்டியில் உள்ள சுப்பிரமணி என்பவரது தோட்டம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, அதே சாலையில் அரவக்குறிச்சி, புங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் பூபதி 22 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற ஆண்டியப்பன் மீது பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், நிலை குழைந்து கீழே விழுந்த ஆண்டியப்பன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, கரூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த ஆண்டியப்பனின் மகன் சந்தோஷ்குமார் காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த ஆண்டியப்பனின் உடலை பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பூபதி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.