இருசக்கர வாகனங்கள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு
கீழ்வேளூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு திருமாளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி பாஸ்கரன் (54) . தற்போது நாகை அருகே சிக்கல் மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் திருவாரூர் மாவட்டம் கங்களாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கங்களாஞ்சேரியில் இருந்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார் .
அப்போது நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் ராமர் மடம் பழைய இரும்பு கடை அருகே மோட்டார் சைக்கிளில் வரும்போது எதிரே நாகையில் இருந்து கூத்தூர் பகுதியை சேர்ந்த சர்புதீன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் ஹரி பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளில் ஒட்டி வந்த சர்புதீன் பலத்த காயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கீழ்வேளூர் போலீசார் ஹரிபாஸ்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .பலத்த காயமடைந்த சர்புதீன் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் .இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்