இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்து இளைஞர் பலி
சங்ககிரியில் இருசக்கர வாகனம் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.;
Update: 2024-03-06 15:43 GMT
இளைஞர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருசக்கர வாகனம் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சங்ககிரி பச்சகாடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(21) இவர் சங்ககிரி மலை மீது உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பச்சக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.