டூவீலர் - கார் நேருக்கு நேர் மோதி முதியவர் உயிரிழப்பு

அரவக்குறிச்சியில் இருந்து பள்ளபட்டி செல்லும் சாலையில் டூவீலர் - கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.;

Update: 2024-02-01 02:07 GMT

டூவீலர் - கார் நேருக்கு நேர் மோதி முதியவர் உயிரிழப்பு. காவல்துறை விசாரணை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மல்லீஸ்வரன் வயது 58. இவர், இவருக்கு சொந்தமான டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் அரவக்குறிச்சியில் இருந்து பள்ளபட்டி செல்லும் சாலையில் நேற்று மாலை 6:45 மணி அளவில் சென்று கொண்டிருந்தார்.

அந்த சாலையில் உள்ள ஆறுமுகம் அகாடமி பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி, காயிதே மில்லத் நகரை சேர்ந்த முஸ்தாக் அலி என்பவர் ஓட்டி வந்த ஸ்விப்ட் டிசையர் கார், எதிர்பாராத நேரத்தில் டூவீலரில் சென்று கொண்டிருந்த மல்லீஸ்வரன் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த மல்லீஸ்வரனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் மல்லீஸ்வரனை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த மல்லீஸ்வரன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags:    

Similar News