திமுக வேட்பாளரை ஆதரித்து இருசக்கர வாகன பேரணி

கருங்குழி பேரூராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு 500-க்கும் மேற்பட்ட இருசக்கர பிரச்சார வாகனங்கள் பங்கேற்பு.

Update: 2024-04-10 04:48 GMT
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பேரூராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஜி. செல்வம் அவர்களை ஆதரித்து, காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ பேசுகையில்,புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மகளிர்களுக்கு இலவச பேருந்து பயணம், உள்ளிட்ட பல்வேறு கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர்களுக்கு பொதுமக்கள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் வீதி வீதியாக ஊர்வலமாகச் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவர் தசரதன், துணைத் தலைவர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News