திமுக வேட்பாளர் ஆதரித்து இருசக்கர வாகன பேரணி!
தர்மபுரி திமுக நகரக் கழகத்தின் சார்பில் இரு சக்கர வாகன பேரணி மூலம் திமுக வேட்பாளர் வாக்குகள் சேகரித்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-08 06:39 GMT
இருசக்கர வாகன பேரணி
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து திமுக நகரக் கழகத்தின் சார்பில் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை இருசக்கர வாகன பேரணி மூலம் உதயசூரியின் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். தர்மபுரி பேருந்து நிலையத்தில் தொடங்கி அரசு மருத்துவ மனை, அன்னாசாகரம், கடைவீதி, பெரியார் சிலை, சந்தப்பேட்டை, மதிகோண் பாளையம்,உழவர் சந்தை, 4ரோடு, குமாரசாமிப் பேட்டை வழியாக எம்ஜிஆர் நகரில் முடிவடைந்தது. அங்கு பொது மக்களிடையே தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அசோக் குமார் சுற்றுச்சூழல் அணை மாவட்ட அமைப்பாளர் இளைய சங்கர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.