இருசக்கர வாகனம் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை
சங்ககிரியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை;
Update: 2023-12-16 07:42 GMT
இருசக்கர வாகனம் திருட்டு
சேலம் மாவட்டம், சங்ககிரி, நல்லப்பநாயக்கன் தெருவில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்று விட்டதாக கூலித்தொழிலாளி சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. சங்ககிரி, நல்லப்பநாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யம்பெருமாள் மகன் கணேசன். இவர் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டீ கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு டிசம்பர் 11ம் தேதி இரவு வீட்டிற்கு முன்பு இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இரவு உறங்க சென்றுள்ளார். இதனை அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது தனது இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது மேலும் இதுகுறித்து கணேசன் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர் சங்ககிரி அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த கூலித்தொழிலாளியின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.