கரடிபட்டி அருகே டூவீலர்கள் மோதல் - ஒருவர் படுகாயம்
கரடிபட்டி அருகே டூவீலர்கள் மோதல் ஒருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.;
Update: 2024-06-01 05:57 GMT
டூவீலர்கள் மோதல்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, கொத்தப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 59. இவர் மே 29ஆம் தேதி அதிகாலை 4:30 மணி அளவில், அரவக்குறிச்சியில் இருந்து சின்ன தாராபுரம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் கரடிப்பட்டி பிரிவு அருகே வந்தபோது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத மற்றொரு டூவீலர், தங்கவேல் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தங்கவேலுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள நிலரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தங்கவேல் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத டூவீலர் எது? அந்த டூ வீலரை ஓட்டிய நபர் யார் என்று கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.