டூவீலர்கள் மோதல்- இளம் பெண் படுகாயம்
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தரகம்பட்டி, கீழப்பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், இவரது மனைவி பிரியங்கா (27). இவர் இவரது தோழி ஓட்டிச் சென்ற டூவீலரில் பின்னால் அமர்ந்து கொண்டு நவம்பர் 10ஆம் தேதி இரவு 7 மணி அளவில், பாளையத்திலிருந்து தோகமலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். இவர்களது வாகனம் கன்னரெட்டிபட்டி பகுதியில் உள்ள வி.கே.ஏ.பால் கம்பெனி அருகே வந்தபோது, திருச்சி மாவட்டம், மணப்பாறை, என்புதூர் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் (44) என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், பிரியங்கா சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பிரியங்கா டூவீலரில் இருந்து கீழே விழுந்ததில், அவரது இடது கால் மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்கா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட தோகைமலை காவல்துறையினர், டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய தன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர்.