உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் - எடப்பாடியில் உற்சாக கொண்டாட்டம்
Update: 2023-11-27 06:33 GMT
இனிப்பு வழங்கிய திமுகவினர்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நவம்பர் 27 தேதி நாளான இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையத்தில், சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் எடப்பாடி நகர கழகச் செயலாளரும், நகர மன்ற தலைவருமான பாஷா தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை உற்ச்சாகமாக கொண்டாடினர். இவ்விழாவில் நகரக் கழக துணைச் செயலாளர் வடிவேல், நகர கழக அவைத் தலைவர் மாதையன், மாவட்ட பிரதிநிதிகள் சிங்காரவேலு, சண்முகம் மற்றும் திமுக பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.