வந்தவாசி :உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

வந்தவாசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.எல்.ஏ.க்கள் அம்பேத்குமார், ஓ.ஜோதி பங்கேற்பு;

Update: 2023-11-28 06:16 GMT

வந்தவாசியில் திமுகவினர் உதயநிதி பிறந்த நாள் கொண்டாடிய நிகழ்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வந்தவாசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மாவட்ட செயலாளர் எம். எஸ்.தரணிவேந்தன், எம். எல்.ஏக்கள் அம்பேத்குமார், ஓ.ஜோதி பங்கேற்பு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி திமுக நகர இளைஞரணி சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்தநாள் விழா, நகர செயலாளர் எ.தயாளன் தலைமையில் கொண்டாடப்பட்டது. நகர இளைஞரணி துணை அமைப்பாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார்.

Advertisement

நகர இளைஞர் அணி அமைப்பாளர் கோமாதா சுரேஷ் அனைவரையும் வரவேற்றார் இதில் கலந்து கொண்ட வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம். எஸ். தரணிவேந்தன், வந்தவாசி எம்.எல்.ஏ.அம்பேத் குமார்,செய்யாறு எம்.எல்.ஏ ஜோதி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதையொட்டி வந்தவாசி பழைய பேருந்து நிலையம், தேரடி ஆகிய இடங்களில் பட்டாசுகள் வெடித்து இளைஞர் அணியினர் உதயநிதி ஸ்டாலின் குறித்த வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், திமுக நகர அவைத் தலைவர் நவாப் ஜான், நகர்மன்ற தலைவர் எச்.ஜலால், துணைத் தலைவர் அன்னை சீனிவாசன்,நகர பொருளாளர் ஏ.ஆர். ராஜாபாஷா மாவட்டஅமைப்புசாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் மணிகண்டன், துணை அமைப்பாளர் ஆர்.பாரி, வர்த்தகர் அணி சலீம், நகராட்சி கவுன்சிலர்கள் கே.நாகூர்மீரான், எம். கிஷோர்குமார், முன்னாள் நகர செயலாளர் லியாகத் பாஷா, மாவட்ட பிரதிநிதி குடியரசு, இளைஞர் அணி உதயா,வாகித், கிளை செயலாளர் குட்டி(எ) அன்பழகன், சாகுல் அமீது, சத்தார், சையத் அப்துல் கறீம், அயலக அணி ஆரிப், தல தளபதி மஞ்சுநாதன்,சி. ரமேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தொண்டர் அணி துணை அமைப்பாளர் ரஜினி,மற்றும் இளைஞர் அணியினர் கட்சி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News