வெள்ளாண்டிவலசு மயானத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டியதால் பரப்பரப்பு

எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு மயானத்தில் அனுமதி இன்றி மரங்களை வெட்டிய நபரால் பரபரப்பு.

Update: 2024-02-17 10:42 GMT

மரங்களை வெட்டியதால் பரப்பரப்பு

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு மயானத்தில் அனுமதியின்றி மரங்களை வெட்டிக் சென்றதாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர் குற்றசாட்டு. சேலம் மாவட்டம் எடப்பாடியில்  நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள மயானத்தில் காய்ந்து போன மரங்களை வெட்டுவதற்காக நகராட்சியின் சார்பாக டெண்டர் விடப்பட்டது. ஆனால் டெண்டர் எடுத்தவர்கள் நன்றாக உள்ள பச்சை மரத்தையும் வெட்டி சாய்த்து எடுத்து சென்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் 12 வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவியிடம் முறையிட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கவுன்சிலர் ரவி சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து விட்டு  டெண்டர் விடப்பட்ட காய்ந்து பட்டு போன மரங்களை வெட்டாமல் நன்றாக உள்ள விலை உயர்ந்த பச்சை மரங்களைவெட்டி எடுத்து சென்றுள்ளதாக குற்றம் சாட்டினார். இது குறித்து நகராட்சி ஆணையாளரிடம் கேட்டபோது பட்டுப்போன காய்ந்த மரங்களை வெட்டுவதற்கு மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும் அதன்படி இல்லாமல் நன்றாக உள்ள மரங்களை வெட்டி இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். அனுமதி இன்றி வெட்டி எடுக்கப்பட்ட மரங்களுக்கு  பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
Tags:    

Similar News