மயங்கி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி

புதுக்கோட்டை மாவட்டம்,உடையார் சாலையில் மயங்கி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-05 09:49 GMT

மயங்கி விழுந்தவர் பலி 

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்னவாசல் உடையார் சாலையில் நடந்து சென்ற கிளிகுடி கூடலூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் வயது 48 என்பவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் மனைவி கொடுத்த புகாரின் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News