பாதாள சாக்கடை பணி -நகராட்சி நிர்வாக இயக்குனரக முதன்மை பொறியாளர் ஆய்வு
Update: 2023-12-17 03:03 GMT
ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மெஷின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ 636.17 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் சர்க்கார் பெரியபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள 36 எம் எல் டி கொள்ளளவு கொண்ட பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் சென்னை முதன்மை பொறியாளர் நடராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாநகர பொறியாளர் லட்சுமணன், துணை மாநகர பொறியாளர் கண்ணன், செல்வநாயகம் பொறியாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.