கீரனூர் அருகே எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பிணம் கண்டுபிடிப்பு
கீரனூர் அருகே கோரிக்கடவு பகுதியில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 12:09 GMT
காவல் நிலையம்
பழனி அருகே கோரிக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்களை புதைப்பதற்கு மட்டுமே அனுமதி இருக்கிறது எரிக்கும் வழக்கம் கொண்டவர் இருந்தால் பழனியில் உள்ள நவீன எரிவாயு மயானத்தில் மட்டுமே உடலை தகனம் செய்ய முடியும் என்ற வழக்கம் உள்ளது.
இந்நிலையில் அந்த சுடுகாட்டில் போலீசார் தலை இல்லாத எலும்புக்கூடை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கபட்ட எலும்புக்கூடு பெண் சிறுமியாக இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.