மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண்சடலம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-25 10:50 GMT

மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில், பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயதுடைய ஆண் நபர் சடலம், போலீசார் விசாரணை . பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தினுள் உள்ள கோயில் அருகில், ஜனவரி 24ஆம் தேதி இன்று காலை பெயர் விலாசம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிரேத அறையில் வைத்து, இறந்து போனவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News