டூவீலர் மீது அடையாளம் தெரியாத கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு.

நஞ்சைகாளக்குறிச்சியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-03 07:50 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா, நஞ்சை காளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் வயது 58. இவர் மே 31 ஆம் தேதி இரவு 9 மணி அளவில், காசிபாளையத்தில் இருந்து நஞ்சை காளக்குறிச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் நஞ்சைகாளக்குறிச்சி ராமசாமி தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் கதிர்வேல் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதிவிட்டு மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது.

Advertisement

இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த கதிர்வேலை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த கதிர்வேலின் மகன் பாஸ்கரன் வயது 31 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், கதிர்வேல் ஓட்டிய டூவீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அந்த அடையாளம் தெரியாத கார் எது? காரை ஓட்டிய டிரைவர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சின்னதாராபுரம் காவல் துறையினர்.

Tags:    

Similar News