அடையாளம் தெரியாத ஆண் சடலம்
எடப்பாடி அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-18 01:59 GMT
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
சேலம் மாவட்டம், எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் அடையாளம் தெரியாத 80 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடைப்பதாக எடப்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது அதனைத் தொடர்ந்து விசாரணையில் ஊர் பெயர் தெரியாத அப்பகுதியில் பிச்சை எடுத்து வந்த நபர் என்பது தெரிய வந்தது. பின்னர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனை சவக்கடங்கில் வைத்துள்ளனர். இதுவரையில் இறந்த நபரின் விலாசம் மற்றும் பெயர் உறவினர்களின் விபரம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.