அடையாளம் தெரியாத ஆண் இறந்த நிலையில் மீட்பு

செங்கோட்டையில் அடையாளம் தெரியாத ஆண் இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-20 04:07 GMT
செங்கோட்டையில் அடையாளம் தெரியாத ஆண் இறந்த நிலையில் மீட்பு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பிரதான சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் காணப்பட்டார், இதை கண்ட பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் செங்கோட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆண் சடலத்தை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News